இன்றைய டாப் 10 செய்திகள் (11.08.2025) | Thanthi TV

Update: 2025-08-11 14:36 GMT
  • சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
  • டெல்லியில் உள்ள பாபா கரக் சிங் மார்க்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட 184 குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
  • தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பா.ஜ.க. மாற்றியுள்ளதாக, முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
  • நவம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்விற்கு ஆகஸ்ட் 11ம் தேதி முதல் அடுத்த மாதம் எட்டாம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தேசமாக நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தாள் தகுதி தேர்வும், ஒன்று தேர்வும், நவம்பர் 2ஆம் தேதி இரண்டாம் தாள் தகுதி தேர்வும் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்