Tirupati | TTD | "விரைவில் தடை.." பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
திருப்பதி மலையில் உள்ள உணவகங்களில் நூடுல்ஸ், ஃபிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுகளுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் தேவஸ்தானத்திற்கு சொந்தமான அனைத்து கோயில்களிலும் அன்னதானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து திருப்பதியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், திருப்பதி மலையில் உள்ள உணவகங்களில் சாப்பாடு, சாம்பார், ரசம், களி, இட்லி, தோசை உள்ளிட்ட பாரம்பரிய உணவுகள் தவிர துரித உணவுகளுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று கூறினார்.