TIRUPATI RAIN | திருப்பதியில் பிரித்து மேயும் கனமழை. வெளியேகாலடி எடுத்து வைக்காமல் அல்லாடும் மக்கள்

Update: 2025-10-25 11:51 GMT

தொடர் கனமழை காரணமாக திருப்பதி மலையில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு.

கடந்த ஒரு வார காலமாக திருப்பதி மலை அமைந்துள்ள சேஷாசலம் வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து அதிக அளவில் நீர் வரத்து இருப்பதால் திருப்பதி மலையில் உள்ள பாபநாசம், ஆகாச கங்கை, பசுப்புதாரா ஆகிய அணைகளுக்கு கனிசமான அளவில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

இதனால் ஓரிரு நாட்களில் அந்த அணைகள் முழுவதுமாக நிரம்ப உள்ளன.

தொடர் கனமழை காரணமாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் அவ்வப்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பதி மலை முழுவதும் மழை நேரத்தில் சாலைகள், பள்ளமான பகுதிகள் ஆகியவற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலை நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்