சென்னை OMR-ல் மாயமான 3 சிறுவர்கள் - விசாரணையில் போலீஸே எதிர்பாரா திருப்பம்

Update: 2025-08-13 14:17 GMT

சென்னை OMR-ல் மாயமான 3 சிறுவர்கள் - விசாரணையில் போலீஸே எதிர்பாரா திருப்பம்

சென்னை ஓ.எம்.ஆர் சாலை சோழிங்கநல்லூரில் வீட்டில் இருந்த 2 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் மாயமாகியுள்ளதாக, பெற்றோர் புகார் அளித்துள்ளனர். பீகாரை சேர்ந்த விஷால் - இந்துதேவி தம்பதிக்கு, 15 மற்றும் 11 வயதில் இரண்டு மகள்களும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சோழிங்கநல்லூரில் தங்கி வேலை செய்து வந்த நிலையில், நேற்று மாலை 3 பிள்ளைகளும் காணவில்லை என செம்மஞ்சேரி போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், பெற்றோருடன் சண்டை போட்டுக்கொண்டு, 3 சிறுவர்களும் பீகாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு ரயிலில் சென்று கொண்டிருப்பது தெரிய வந்த‌து. பீகார் சென்றடைய 2 நாட்கள் ஆகும் என்பதால், அவர்களை கண்காணித்து வரும் போலீசார், பீகார் சென்றடைந்த‌தும், அம்மாநில போலீஸ் உதவியுடன் மீட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்