"சந்திர கிரகண நேரத்தில் இந்த கோயில் நடை சாத்தப்படாது.." - வெளியான அறிவிப்பு
சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலையும் கோயில் நடைதிறப்பு
திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் மாலை கோயில் நடை சாத்தப்படாது என்று கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள சனீஸ்வரன் ஆலயத்தில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயிலில் நடை சாத்தப்படாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சனீஸ்வர பகவான் சன்னதி பக்தர்கள் வழிபாட்டிற்காக சந்திர கிரகண நேரத்தில் திறந்திருக்கும் எனவும், மாலை நேரத்தில் பக்தர்கள் வழிபடலாம் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.