"இது ஒன்றும் புதிய முடிவு இல்லை.." - தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம்

Update: 2025-08-14 06:51 GMT

"ஆக.15 இறைச்சி கடைகள் மூடல் - ஏற்கனவே நடைமுறையில் உள்ளதே"

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிராவின் கல்யாண் - டோம்பிவிலி (Kalyan-Dombivli) நகராட்சி பகுதியில் இறைச்சி கடை உள்ளிட்டவையை மூட உத்தரவிட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் தந்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த முடிவு 1988 முதல் நடைமுறையில் உள்ளதாகவும், தற்போது இந்த முடிவை அரசு எடுக்கவில்லை எனவும் கூறினார். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது இந்த முடிவு நடைமுறையில் இருந்ததாகவும், இது ஒன்றும் புதிய முடிவு இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்