கட்டையை வைத்து ராணுவ வீரரை கதற கதற அடித்த டோல்கேட்

Update: 2025-08-18 09:23 GMT

உ.பி. சுங்கச்சாவடியில் ராணுவ வீரர் மீது தாக்குதல்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள சுங்கச்சாவடியில் ராணுவ வீரர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றும் கபில் என்பவர், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள தனது சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் பணிக்குச் செல்ல தனது நண்பருடன் டெல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கர்னால் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை கடந்தபோது, அங்கிருந்த ஊழியர்களுடன், போக்குவரத்து நெரிசல் மற்றும் சுங்கக் கட்டணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள், கபிலை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்த நிலையில், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்