கிளியிடம் பாடம் கற்றதாகவும், எவ்வித கெட்ட பழக்கமும் இல்லாத தன் குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் புற்றுநோயால் மரணம் அடைந்ததால், தன் முடிவை மாற்றியதாகவும் ஐஐடி இயக்குனர் காமகோடி சுவாரசியமான தகவலை சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நடைபெற்ற மாநாட்டில் ஐஐடி இயக்குனர் காமகோடி, தனது இயற்கை விவசாய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது தனது குடும்ப உறுப்பினர்களில் 2 பேர் எவ்வித கெட்ட பழக்கமும் இல்லாத சூழலில் விஷமான உணவை உட்கொண்டாதால் உயிரிழந்ததால் கடந்த 2012 முதல் இயற்கை விவசாயத்திற்கு தான் மாறியதாக குறிப்பிட்டார். மேலும் ஒரு முறை வயலில் 500 கிளிகள் இருந்ததை கண்டதாகவும், ஆனால் பக்கத்தில் இருக்கக்கூடிய வயலில் ஒரு கிளி கூட அமரவில்லை என்றும், இதன்மூலம் கிளிகளுக்கு கூட இயற்கையான பயிர் எது என தெரிந்திருக்கிறது என்றும் கூறினார்.