கால் வழுக்கி 100 அடி பள்ளத்தில் விழுந்த சுற்றுலா பயணி மரணம்
கேரள மாநிலம் இடுக்கிக்கு, எர்ணாகுளத்தில் இருந்து சிலர் குழுவாக சுற்றுலா வந்துள்ளனர். அக்குழுவில் இருந்த
தோபியாஸ் என்பவர் சாத்தான்பாறை என்ற இடத்தில் கீழே இறங்க முயன்ற போது 100 அடி பள்ளத்தில் வழுக்கி விழுந்துள்ளார். சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தோபியாஸை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடும் பனிமூட்டம் காரணமாக அவரை தேடுவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு
நூறடி பள்ளத்தில் இறந்த நிலையில் தோபியாஸ் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.