கரண்ட்டில் அடிபட்ட காக்கா..CBR சிகிச்சை கொடுத்த நபர்..அடுத்த கணமே நடந்த அதிசயம்
கேரளாவில் காகத்துக்கு சி பி ஆர் சிகிச்சை அளித்து காகத்தின் உயிரை காப்பாற்றியவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் பரீத் என்பவர் தொழுகை முடித்து திரும்பி வருகையில், காகம் ஒன்று மின்கம்பியில் அடிப்பட்டு சாலையில் துடித்துக்கொண்டிருந்துள்ளது. உடனே அவர், அந்த காகத்திற்கு சி பி ஆர் முதலுதவி செய்து, காகத்தின் உயிரை காப்பாற்றியுள்ளார். இதனை கண்ட சுற்றி இருந்தவர்கள், அவரை வெகுவாக பாராட்டினர்