கேரளாவுக்கே விபூதி அடித்த கோவை பெண்

Update: 2025-08-23 03:29 GMT

தனியார் நிறுவனத்தில் ரூ.1 கோடி கையாடல் - பெண் ஊழியர் கைது

கேரளாவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி லட்சக்கணக்கில் கையாடல் செய்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த மை ட்ரிப் ஹவுஸ் போர்ட் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பணிகளை கவனித்து வந்த கோவையைச் சேர்ந்த திவ்யா கருப்புசாமி என்பவர் பல்வேறு முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை ஏமாற்றி சுமார் ஒரு கோடி ரூபாய் வரை கையாடல் செய்ததாகக் கூறி, மை ட்ரிப் ஹவுஸ் போர்ட் (Mytrip houseboat) உரிமையாளர் ஆலப்புழா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து அலப்புழா போலீசார் திவ்யா கருப்புசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்