பயங்கரமாய் ஓடிய பேய் வெள்ளம்.. நொடியில் ஜீப்பை அடித்து சென்ற திக்.. திக்.. காட்சி
ஆற்றை கடக்க முயன்ற போது ஜீப் கவிழ்ந்து விபத்து
சண்டிகரில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய ஜெயந்தி தேவி ஆற்றை கடக்க முயன்றபோது ஜீப் ஆற்றில் கவிழ்ந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டது. முன்னதாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஆற்றை கடக்க முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தும் கேட்காமல் ஒட்டுநர் ஜீப்பை இயக்கி ஆற்றை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.. வெள்ள நீரில் ஜீப் கவிழ்ந்து அடித்து செல்லப்பட்ட நிலையில், அதிலிருந்தவர்கள் போராடி உயிர் தப்பினர்.