Telangana | Mohammad Azharuddin | தெலங்கானா அமைச்சரானார் EX கிரிக்கெட் வீரர் அசாருதீன்
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் பதவி ஏற்றுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த முகமது அசாருதீனை சட்டப் பேரவையின் மேலவை உறுப்பினராக நியமிக்கப்போவதாக காங்கிரஸ் அரசு தெரிவித்திருந்த நிலையில், அமைச்சராக அசாருதீன் பதவி ஏற்றுள்ளார். முன்னதாக வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை குறிவைத்து சட்டமன்ற உறுப்பினராக அல்லாத முகமது அசாருதீனை அமைச்சராக நியமித்துள்ளதாக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.