12,000 பேர் வேலையை பறித்து வீட்டிற்கு அனுப்ப `TCS' முடிவு - பீதியில் IT ஊழியர்கள்
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் 2026 ஆம் நதியாண்டில் தனது பணியாளர்களில் இரண்டு சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைzயின் மூலம் அந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் பேர் வேலையை இழக்க உள்ளனர். இந்தப் பணி நீக்க நடவடிக்கை மார்ச் 2026 வரை மேற்கோள்ளப்படும் என்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் டிசிஎஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது