தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கான ஆதார் எண் இணைக்கும் பணியை ஐ.ஆர்.சி.டி.சி IRCTC தொடங்கியுள்ளது. ரயில் முன்பதிவு டிக்கெட்டை பெறுவதற்கு பெரும்பாலானோர் ஐ.ஆர்.சி.டி.சி இணையதள கணக்கை பயன்படுத்தி வருகின்றனர். போலி ஐ.ஆர்.சி.டி.சி இணையதள கணக்குகளால் தட்கல் முன்பதிவு டிக்கெட் பெறுவதில் பயணிகள் பெரும் சிக்கலை சந்தித்து வந்தனர். இதனையடுத்து சுமார் இரண்டரை கோடி போலி ஐ.ஆர்.சி.டி.சி இணையதள கணக்குளை ரயில்வே நிர்வாகம் நீக்கியது.
அதேசமயம், வரும் ஜுலை 1-ம் தேதி முதல், ஆதார் ஓ.டி.பி. OTP அடிப்படையில் மட்டுமே தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளை பெற முடியும் என்றும் கூறியது. அதன்படி ஐ.ஆர்.சி.டி.சி இணையதள கணக்குகளை வைத்துள்ள பயனாளர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இந்நிலையில், அதற்கான பணிகளை ஐ.ஆர்.சி.டி.சி தொடங்கியுள்ளது.