Tatkal Ticket Booking | ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Tatkal Ticket Booking | Important Notice for Train Passengers

Update: 2025-12-06 03:08 GMT

Tatkal Ticket Booking | ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

தட்கல் முன்பதிவில் ஓடிபி கட்டாயம்- தெற்கு ரயில்வே அறிவிப்பு

தட்கல் முன்பதிவில் ஓடிபி கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது...

டிக்கெட் முன்பதிவில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க புதிய முன்னெடுப்பை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக தெற்கு ரயில்வே பயனர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாஃபர் அலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தட்கல் டிக்கெட் முன்பதிவில் ஆதார் உடன் இணைந்த செல்போன் ஒடிபி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். IRCTC இணையதளத்தில் தற்போது ஒரு நிமிடத்தில் 25 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியும் என்றும், வரும் நாட்களில் நாடு முழுவதும் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வகையில் PRS அமைப்பு மேம்படுத்தப்படும் எனும் அவர் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்