நாட்டிற்கே வெளியான இனிப்பு செய்தி - பிரதமர் மோடி போட்ட ட்வீட்

Update: 2025-09-04 02:15 GMT

ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு சாமானியர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுதந்திர தின உரையிலேயே இது குறித்து பேசி இருந்ததாகவும், அதன்படி மத்திய அரசு ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மற்றும் செயல்முறை சீர்திருத்தங்களுக்கு விரிவான திட்டத்தை உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்திய மற்றும் மாநிலங்களை உள்ளடக்கிய GST கவுன்சில் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பரந்த சீர்திருத்தங்கள் குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, சிறு வணிகர்கள் மற்றும் வணிகங்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்