ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ., எச்.டி. ரேவண்ணாவின் மகனான சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு. சூரஜ் ரேவண்ணாவின் கட்சி தொண்டரான சிவக்குமார், சூரஜ் ரேவண்ணா மீது ஓரின சேர்க்கை தொடர்பான பாலியல் புகார் அளித்துள்ளார். சூரஜ் ரேவண்ணா தன்னையும் ஓரினசேர்க்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவக்குமார் குற்றச்சாட்டு. இதே சிவக்குமார் தான், முதலில் புகார் அளித்த சேத்தன் என்ற நபர், சூரஜ் ரேவண்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக ஒலேநரசிபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். சிஐடி போலீசாரால் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வரும் சூரஜ் ரேவண்ணா மீதான இந்த புதிய புகாரால் அவருக்கு மேலும் நெருக்கடி.