Supreme Court | மக்களை நிலாவில் குடி வைத்து விடலாமா?.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு கேள்வி..

Update: 2025-12-13 03:45 GMT

மக்களை நிலாவில் குடி வைத்து விடலாமா?.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு கேள்வி..

நாட்டின் 75 சதவீத மக்களை நிலவில் குடியமர்த்திவிடலாமா? நிலநடுக்க அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை நிலாவில் குடியமர்த்திவிடலாமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாட்டின் 75 சதவீத மக்கள் நிலநடுக்க அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பதாகவும், நிலநடுக்க பாதிப்புகளை தடுக்க அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் மனுதாரர் ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், “75 சதவீத மக்களையும் நிலாவில் குடியமர்த்திவிடலாமா?“ என கேள்வி எழுப்பியது. இதனையடுத்து அரசின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்