கோடை விடுமுறை.. சிறுவர்கள் ஒன்று சேர்ந்து செய்த காரியம் - நேரில் வந்த MLA

Update: 2025-05-04 05:25 GMT

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கல்லுருட்டி பகுதியில், சிறுவர்கள் துவங்கிய மிட்டாய் கடையை எம்எல்ஏ திறந்து வைத்துள்ளார். முகமது சியான், முகமது சமீல், அனந்து கிருஷ்ணன், அகமது ஷாதில் ஆகிய 4 பேரும் இணைந்து, கோடை விடுமுறையை பயனுள்ளதாக விரும்பி, தங்கள் வீட்டின் அருகில் உள்ள மைதானத்தில் விளையாடும் குழந்தைகளுக்காக மிட்டாய் கடை அமைத்தனர். சிறுவர்களின் வேண்டுகோளை ஏற்று, கோழிக்கோடு திருவம்பாடி எம்எல்ஏ லிண்டோ ஜோசப் திறந்து வைத்து, சிறுவர்களுக்கு மிட்டாய்களை வழங்கினார். பின்னர் தனது சமூக வலைதளத்தில், கல்லுருட்டியில் லுலுமால் திறக்கப்பட்டது என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்