பெரும் புயலை கிளப்பிய திடீர் ED ரெய்டு.. கார்கே பகீர்

Update: 2025-06-12 06:26 GMT

வால்மீகி முறைகேடு.. அமலாக்கத்துறை சோதனை - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

கர்நாடகாவில் வால்மீகி மேம்பாட்டு கழகத்தில் நடைபெற்ற நிதி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் வால்மீகி மேம்பாட்டு கழகத்தில் டெபாசிட் செய்யப்பட்ட 43 கோடி உட்பட மொத்தம் 187 கோடி ரூபாய், பல போலி வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும், இதில் 20 கோடி ரூபாய் பெல்லாரி மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரின் தேர்தல் செலவுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் பெல்லாரி தொகுதி எம்எல்ஏ நாரா பாரத் ரெட்டி, காம்ப்ளி எம்எல்ஏ ஜே.என்.கணேஷ் மற்றும் பெல்லாரி கிராமப்புற எம்எல்ஏ நாகேந்திராவின் நெருங்கிய கூட்டாளி கோவர்தன் ரெட்டி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைப்பதே பாஜகவின் நோக்கம் என்றும், அதற்காகவே காங்கிரஸ் கட்சியை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுவதாகவும், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமலாக்கத்துறை சோதனையின் பின்னணியில் பா.ஜ.க.வின் அழுத்தம் உள்ளதாகவும்,

அமலாக்கத்துறையை வைத்து தேர்தலுக்கு முன் பறிமுதல் செய்த பணம் என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது என்றும் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்