குழந்தைகளை வெறிகொண்டு துரத்திய தெரு நாய்கள் - அலறியபடி சிறுமி செய்த செயல்
குழந்தைகளை வெறிகொண்டு துரத்தும் தெரு நாய்கள்
கேரளாவில், வீட்டின் முன் விளையாட வந்த குழந்தைகளை தெரு நாய்கள் துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு திருவேதபுரம் பகுதியில், விளையாடுவதற்காக சாலைக்கு வந்த குழந்தைகளை தெருநாய்கள் கூட்டாக சேர்ந்து துரத்தியுள்ளன. துரிதமாக செயல்பட்ட சிறுமி, வீட்டின் கேட்டை அடைத்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.