"ஒரு நிமிடம் ஒதுக்குங்க" தசைநார் சிதைவு நோயால் 6 வயது குழந்தை பாதிப்பு
ஸயான் (Zayyan) என்ற 6 வயது குழந்தை, DMD என்கிற தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உதவிகள் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓடி ஆடி விளையாடும் குழந்தைகள் மத்தியில், ஓடவோ, நடக்கவோ முடியாது என்கிற பரிதாப நிலைக்கு இந்தக் குழந்தை தள்ளப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு கடந்த ஆண்டு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Gene therapy என்கிற ஒரு ஊசியின் விலை 25 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை செலுத்தினால், தங்கள் குழந்தை ஸயான்-ஐ (Zayyan) காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில் பெற்றோர் போராடி வருகின்றனர். இதனால், இந்த குழந்தை பற்றிய வீடியோவை பார்ப்பவர்கள், தங்களால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என்றும், பிரபலங்கள் யார் இந்த வீடியோவை பார்த்தாலும் அதற்கு ஒரு நிமிடம் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்