"ஜனநாயகன் பட்டத்தை சிலர் திருட முயற்சி.." | பிரதமர் மோடி மறைமுக விமர்சனம்

Update: 2025-10-04 16:47 GMT

ஜனநாயகன் பட்டத்தை சிலர் திருட முயற்சி"- ராகுல் மீது மோடி விமர்சனம்

ஜனநாயகன் என்ற பட்டத்தை கூட சிலர் திருட முயற்சிக்கின்றனர் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.

சமீப காலமாக, ராகுல் காந்தியை ஜனநாயகன் என்று காங்கிரஸ் கட்சியினர் அழைத்து வரும் நிலையில், பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

பீகாரில் இளைஞர்களுக்கான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பேசியபோது, பீகார் முன்னாள் முதல்வர் கற்பூரி தாக்குரை, ஜனநாயகன் என மக்கள் அழைத்ததாகவும், ஆனால், அந்த பட்டத்தைக் கூட சிலர் திருட முயற்சிப்பதாகவும் சாடினார்.

கற்பூரி தாக்கூருக்கு மக்கள் வழங்கிய மரியாதை, திருடப்படாமல் இருக்க பீகார் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்