காரோடு எரிந்து கிடந்த அக்கா, தம்பி - போலீஸ் வண்டிகள் அடித்து நொறுக்கி சூறை..பாட்னா பதற்றம்
போராட்டத்தில் போலீஸ் வாகனம் சூறை- தள்ளுமுள்ளு
பீகார் மாநிலம், பாட்னாவில், 2 சிறார்களின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடந்த 15-ஆம் தேதி டியூஷன் சென்ற 7 வயது அக்காவும், அவருடைய 5 வயது தம்பியும், காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, சிறுவர்களின் உறவினர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமாதானப்படுத்த வந்த போலீசாரின் வாகனங்களை அவர்கள் அடித்து நொறுக்கியதால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், சம்பவ இடத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.