Sharukhkhan BJP Issue | `துரோகி’ பட்டம் கட்டிய பாஜக - ஷாருக்கானுக்காக ஒலித்த குரல்
ஷாருக்கானை 'துரோகி' என விமர்சிக்கும் பாஜக
ஐபிஎல் ஏலத்தில் தனது கொல்கத்தா அணிக்காக வங்கதேச கிரிக்கெட் அணி வீரரை ஏலத்தில் எடுத்த பாலிவுட் நடிகர் ஷாருக்கானை பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.
வங்கதேச கிரிக்கெட் வீரரான முஸ்தாபிசுர் ரஹ்மானை 9.2 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்துள்ளது. இந்நிலையில், வங்கதேசத்தில் தற்போது இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் சம்பவங்களை குறிப்பிட்டு பாஜக தலைவர் சங்கீத் சோம், சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் நிருபம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஆனந்த் துபே உள்ளிட்டோர், ஷாருக்கானுக்கு எதிராக கடுமையான கருத்துக்களின் முன் வைத்துள்ளனர். மேலும் வங்கதேச வீரர்களை ஐபிஎல்லில் விளையாட அனுமதிக்க கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் ஷாருக்கானை துரோகி என்று பாஜக அழைப்பது இந்தியாவின் பன்முகத்தன்மை மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். "