மீனவரை கொன்ற இளைஞர்கள் மோதலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மீனவரை கல்லால் அடித்து கொலை செய்த கும்பல் மற்றொரு தரப்பினரிடம் மோதி கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. போதையில் ரகளை செய்த இளைஞர்களை தட்டிகேட்டதால் மீனவர் அடித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதே கும்பல் புத்தாண்டு நாளில் மற்றொரு இடத்திலும் ரகளை செய்துள்ளனர்..