குடியரசுத் தலைவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சச்சின்.. பார்த்து வாயடைத்து நின்ற முர்மு
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை தனது குடும்பத்தினருடன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது, திரௌபதி முர்முவுடன் சச்சின் டெண்டுல்கர் சிறிதுநேரம் உரையாடினார். பின்பு தனது கையெழுத்திட்ட டெஸ்ட் கிரிக்கெட் டி-ஷர்ட் ஒன்றை, குடியரசுத் தலைவருக்கு சச்சின் டெண்டுல்கர் பரிசளித்தார்.