காசிரங்கா பூங்காவில் ஜீப் சவாரி செய்த சச்சின் டெண்டுல்கர்

Update: 2025-04-09 07:18 GMT

அசாம் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஜீப் சவாரி செய்தார். அசாம் மாநிலத்தின் பாரம்பரிய காம்ச்சா என்னும் துண்டை கழுத்தில் அணிந்தபடி ஜீப் சஃபாரி செய்தார். மேலும்,

கோடை காலத்தில் வனவிலங்குகளின் பாதுகாப்புக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதனிடையே, சச்சின் டெண்டுல்கர் வருகை வனத்துறையின் முயற்சிகளை உற்சாகப்படுத்துவதோடு, காசிரங்கா தேசிய பூங்காவிற்கு மறக்க முடியாத நாளாக மாறியுள்ளதாக, மத்திய வனத்துறை அமைச்சர் சந்திரமோகன் பட்டோவாரி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்