Sabarimalai Bus உள்ளே ஐயப்ப பக்தர்கள்.. பள்ளத்தில் கவிழாமல் அந்தரத்தில் நின்ற பஸ்.. திக் திக் வீடியோ
விபத்தில் சிக்கிய தனியார் பேருந்து - உயிர்தப்பிய தமிழக பக்தர்கள்
கேரளாவில், தமிழக ஐயப்ப பக்தர்கள் பயணித்த
தனியார் பேருந்து விபத்தில் சிக்கிய நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன.
கேரள மாநிலம் எரிமேலி பகுதியிலிருந்து முண்டக்கையம் பகுதியை நோக்கி செல்லும் சாலையில், கண்ணிமலை என்ற பகுதியில், பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு வேலியில் மோதியது. எனினும் அங்கிருந்த பள்ளத்திற்குள் பேருந்து கவிழாமல் இருந்ததால், ஐயப்ப பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.