CP Radha Krishnan | Vice President News | PM Modi | ஆளும் கட்சியும்.. எதிர்க்கட்சியும்.. சி.பி.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பிரஸ்மீட்
ஜனநாயகத்தில், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
குடியரசு துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். 2047க்குள் விசித் பாரதம் (Viksit Bharat) வேண்டுமென்றால், எல்லாவற்றிலும் அரசியல் செய்யக்கூடாது என்று குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். தேர்தல் முடிந்ததும் அரசியலை மறந்து, நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார். புதிய பதவியில் நாட்டின் வளர்ச்சிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் உறுதியளித்தார். இந்தியா கூட்டணி இந்த தேர்தலை சித்தாந்தப் போராட்டம் என்று கூறினாலும், தேசியவாத சிந்தனையே வெற்றி பெற்றது எனவும் கூறினார்.