ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் எட்டு நக்சல்கள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிஆர்பிஎப் படை பிரிவின் கோப்ரா கமாண்டோ படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே காலை முதல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற நிலையில், 8 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டரில், ஒரு கோடி ரூபாய் சன்மானமாக அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சலைட்டான விவேக் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.