ராபர்ட் வதேராவுக்கு எதிரான அமலாத்துறை வழக்கு விசாரணையை டெல்லி நீதிமன்றம் ஜூலை 24-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
ஹரியானா மாநிலம் சிகோபூரில் நிலம் வாங்கி முறைகேடு செய்த குற்றச்சாட்டில் தொடர்புடைய நிதி முறைகேடு வழக்கில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணையை டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜூலை 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. ராபர்ட் வதேரா உட்பட 11 நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையை வியாழக்கிழமை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.