'ரெட் அலர்ட்' - குஜராத்தில் விடிய விடிய வெளுத்த மழை..

Update: 2025-08-23 04:59 GMT

குஜராத்தை மூழ்கடிக்கும் கனமழை

குஜராத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், இந்திய வானிலை ஆய்வு மையம், அம்மநிலத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது. குஜராத் மாநிலத்தில் விடிய விடிய பரவலாக கொட்டி தீர்க்கும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல பகுதிகளில் வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம் குஜராத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில், மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்