Rahul Gandhi | `திருடன்' என நினைத்து பட்டியலின இளைஞர் அடித்துக் கொ*ல - கண்சிவந்த ராகுல் காந்தி
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் திருடன் என நினைத்து பட்டியலின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் தொகுதியான ரேபரேலியில் தனது மாமியார் வீட்டுக்குச் சென்ற ஹரி ஓம் என்ற பட்டியலின இளைஞரை திருடன் என கருதி அப்பகுதி மக்கள் கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர், அவ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதைத் தடுக்க தவறியதாக 5 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.