மக்களோடு மக்களாக பைக் ஓட்டிச் சென்ற ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ

Update: 2025-08-24 08:07 GMT

பீகாரில் யாத்திரை... பைக் ஓட்டிச் சென்ற ராகுல் காந்தி...

பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இருசக்கர வாகன பேரணியில் பங்கேற்றார்.

வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ராகுல் காந்தி, பீகாரில் வாக்காளர் அதிகார யாத்திரையை மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, புர்னியா என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி மற்றும் ஆர்.ஜே.டி மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றனர். இதில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும் பங்கேற்று, கட்சிக்கொடியுடன் அணிவகுத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்