திருமண விருப்பத்தை கூறிய ராகுல் காந்தி - கலகலப்பு
பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி திருமணம் குறித்து பேசினார். தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி, பீகாரில் ராகுல் காந்தி விழிப்புரணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அராரியா என்ற இடத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுடன் அவர் செய்தியாளரை சந்தித்தார்.
அப்போது மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தேஜஸ்வி யாதவ் கூறினார். அப்போது அவரிடம் இருந்த மைக்கை வாங்கிய ராகுல் காந்தி, இந்த அறிவுரை தனக்கும் பொருந்தும் என்று நகைச்சுவையுடன் பேசினார்.