Pune | Raid News | பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு - 19 நபர்களின் வீடுகளில் அதிரடி சோதனை
மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படை, புனே போலீசாருடன் இணைந்து நகரின் 19 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் 19 நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது. சந்தேகத்திற்குரிய நபர்கள் பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்தல், வெடிக்கும் சாதனங்களை தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் சிலரை விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.