ஒரே நேரத்தில் துடித்து நின்ற 3 உயிர்கள்... விஷயம் தெரிந்ததும் கொந்தளித்த மக்கள்... பெரும் பரபரப்பு
ஒரே நேரத்தில் துடித்து நின்ற 3 உயிர்கள்... விஷயம் தெரிந்ததும் கொந்தளித்த மக்கள்... பெரும் பரபரப்பு
புதுச்சேரியில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி பத்துக்கன்னு பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில், குணசீலன், சரண்ராஜ். பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய இவர்கள் மூவரும், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த, கனரக வாகனத்தின் மீது மோதி உயிரிழந்தனர்.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், மூவரின் இறப்பிற்கும் தனியார் தொழிற்சாலை ஒன்றின் கனரக வாகனமே காரணம் என குற்றசம்சாட்டி, பத்துக்கன்னு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சு வார்த்தைக்கு பின்னர் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.