கேரளாவில் பல்கலைக்கழகங்களை காவி மயமாக்க ஆளுநர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டி, திருவனந்தபுரம், கண்ணூர் கோழிக்கோட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை SFI மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டதால் கைது செய்யப்பட்டனர். கண்ணூரில் நடந்த போராட்டத்தில் மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டிய போலீசார், குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற மாணவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர். அதே நேரத்தில், தடுப்புகளை தாண்டி சென்று பல்கலைக்கழகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை, கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.