டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்.. வீடு வீடாக வாக்கு சேகரித்த பிரியங்கா காந்தி | Priyanka Gandhi

Update: 2025-02-03 11:25 GMT

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் 5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஜங்புரா சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், வீடு வீடாகச் சென்று பிரியங்கா காந்தி வாக்கு சேகரித்தார். மேலும், வியாபாரிகளுடன் கலந்துரையாடி, துண்டு பிரசுரங்களை விநியோகித்து, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்

Tags:    

மேலும் செய்திகள்