பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்
சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. ராணா டகுபதி ஜூலை 23ஆம் தேதியும், பிரகாஷ் ராஜ் ஜூலை 30-ஆம் தேதியும், விஜய் தேவரகொண்டா ஆகஸ்ட் 6-ஆம் தேதியும் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. சட்டவிரோத செயலி தொடர்பாக அளித்த புகாரின் பேரில், நடிகர்கள், பிரபலங்கள் என 25 பேர் மீது தெலங்கானா காவல் துறை கடந்த மார்ச் மாதம் வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.