தனது 34 ஆண்டுகால பொது பணியில் சுமார் 54 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா பணி ஓய்வு பெற்றார்.ஹரியானா மாநில போக்குவரத்து துறையில் கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வந்த இவர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர்.1991ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர் குரு கிராம் நில ஊழல் தொடர்பாக ராபர்ட் வதேராவின் மீது துணிச்சலான நடவடிக்கை எடுத்து கவனம் பெற்றார். தொடர்ந்து ஊழலுக்கு எதிராக உறுதியாகவும், துணிச்சலாகவும் செயல்பட்ட இவர், பணி ஓய்வுக்கு முன் ஊழல் ஒழிப்பு துறையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.