#JUSTIN || உயர் ரக கஞ்சா பிரபல இயக்குநர் உட்பட 3 பேரை - தட்டி தூக்கிய போலீஸ்

Update: 2025-04-27 06:27 GMT

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி கோஸ்ரீ பாலம் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பிரபலங்கள் கஞ்சா பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் படி அதிகாலை 2 மணி அளவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்ட போது பிரபல இயக்குனர் காலித்ரகுமான் மற்றும் அஷ்ரப் ஹம்சா இவர்களுடன் சாலிப் முகமத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கலப்பின கஞ்சா 1.6 கிராம் போலீசார் கைப்பற்றியுள்ளனர். கேரளாவில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான ஆலப்புழா ஜிம்கானா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் காலித் ரகுமான் ஆவார். மேலும் தமாஷா, பீமனே வாழி படத்தை இயக்கிய அஷ்ரப் ஹம்சா. இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா குறைந்த அளவே இருந்ததால் இவர்கள் ஜாமீனை விடுவிக்கப்பட்டனர். மலையாள சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான விவாகரங்களில் கலால் துறை துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்