பூடான் கோயில் கட்ட வாரணாசியில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு பூடான் நாட்டின் கோயில் மற்றும் விருந்தினர் இல்லம் கட்டுவதற்கு வாரணாசியில் இடம் ஒதுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பூடான் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் தலைநகர் திம்புவில் உள்ள சங்லிமேதங் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தற்போதைய மன்னரின் தந்தையும், நான்காவது மன்னருமான ஜிக்மே சிங்கியே வாங்சுக்கின் 70 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போதுஇந்தியாவும் பூடானும் எல்லைகளால் மட்டுமல்ல, கலாச்சாரங்களாலும் இணைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.