PM Modi | Donald Trump | மோடி சொன்ன ஒற்றை வார்த்தை.. டிரம்ப் முகத்தில் அப்படி ஒரு `சிரிப்பு'
காசாவை விட்டு பாலஸ்தீன மக்கள் வெளியேறாத வகையில்,இஸ்ரேல், பாலஸ்தீனம் என இரு பிராந்திய மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு, போர் நிறுத்தத்துக்கு டிரம்ப் 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.இதை வரவேற்று பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,காசா போரை நிறுத்தும் வகையில் டிரம்ப் வெளியிட்ட விரிவான திட்டங்களை வரவேற்பதாக கூறியுள்ளார்.டிரம்பின் இத்தகைய முயற்சிக்கு பின்னால் சம்பந்தப்பட்ட அனைவரும் அணிதிரண்டு போரை முடிவுக்கு கொண்டுவருவதுடன்,காசா முனையில் அமைதி திரும்ப வழிவகை செய்வர் என தாம் நம்புவதாக அந்தப் பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.