PM Modi | BJP | Biharelection | அனல் பறக்கும் பீகார் தேர்தல் - ஆட்டத்தை தொடங்கிய பிரதமர் மோடி
பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரத்தை துவங்குகிறார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் மோடி பீகாரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். சமூக நீதிக்காகப் போராடியவரும், மக்களின் தலைவர் என்று அழைக்கப்பட்டவருமான கற்பூரி தாக்கூரின் இல்லத்திற்குச் சென்று பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தவுள்ளார். கற்பூரிக்ராமில் அஞ்சலி செலுத்திய பிறகு சமஸ்திபூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். பின்னர் அருகிலுள்ள பெகுசராயில் இரண்டாவது பொது கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.