Pilot | AirHostess | அத்துமீறிய பைலட்... பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு..ஹோட்டலில் அதிர்ச்சி
பெங்களூருவில் தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மூத்த பைலட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
26 வயதாகும் பெண் கேபின் க்ரூ ஊழியருக்கு, சீனியர் பைலட் ரோகித் சரண் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், கடந்த 18-ம் தேதி ஹோட்டலில் இருந்த போது இச்சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் ஐதராபாத் திரும்பியவுடன் புகார் அளித்துள்ளார். அதில், மது அருந்திய நிலையில் ரோகித் சரண் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.