Pawan Kalyan | Auto | திடீரென ஆட்டோவில் வந்த `OG’ - பார்க்க வெறிகொண்டு துரத்திய மக்கள்

Update: 2025-10-05 03:44 GMT

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆட்டோ ஓட்டுநர்களுக்காக ஆண்டுதோறும் 15 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் ‘ஆட்டோ டிரைவர்லா சேவலோ’ (Auto Driverla Sevalo) என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். மாநிலத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 436 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், சுமார் 2, லட்சத்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தகுதியான ஆட்டோ ஓட்டுநர்கள் நிதி உதவியை பெற உள்ளனர். விழாவின் ஒருபகுதியாக, முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வர் பவன் கல்யாணும் ஆட்டோவில் பயணித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்