ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து தண்டவாளத்தில் போராடிய பயணிகள்..

Update: 2025-06-08 05:08 GMT

சென்னை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக ரயிலின் குளிர்சாதன பெட்டி ஏசி கோளாறு குறித்து பயணிகள் கேட்டபோது, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சரிசெய்யப்பட்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், ஜோலார்பேட்டை கடந்தும் பழுது நீக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ரயிலை நிறுத்தியதுடன், தண்டவாளத்தில் இறங்கி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், சேலம் சென்றவுடன் கோளாறு சரிசெய்யப்படும் என வாக்குறுதி அளிக்க பயணிகள் மீண்டும் ரயிலில் ஏறி பயணித்தனர். இது குறித்த செய்தி தந்தி டிவியில் வெளியான நிலையில் சேலம் சென்றவுடன் பத்துக்கு மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட கோளாறை சீர் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்